மஹிந்தவுக்கு புதிய அமைச்சு – ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம்

0

பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டச் செயற்படுத்துகை அமைச்சராகப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதி அமைச்சராக பதவி வகித்திருந்த நிலையில், குறித்த பதவி பசில் ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ளமையை அடுத்து, இந்த புதிய அமைச்சுப் பதவி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டச் செயற்படுத்துகை துறை அமைச்சு என்ற புதிய அமைச்சு அதிவிசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன், இந்த அதிவிசேட வர்த்தமானி நேற்று வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.