மஹிந்தானந்த அளுத்கமகே இலங்கை கிரிக்கெட் வீரர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
நுவரெலியாவில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் நவீன் திஸாநாயக்க மேலும் கூறியுள்ளதாவது, “2011 இல் நடைபெற்ற உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றுள்ளதாக மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக எந்ததொரு சாட்சியங்களும் இன்றி அவர் முறைப்பாடு தெரிவித்துள்ளார்.
ஆகவே, இவ்விடயம் தொடர்பாக மஹிந்தானந்த அளுத்கமகவே, முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மேலும் இலங்கை கிரிக்கெட் வீரர்களிடமும் அவர் மன்னிப்புகோர வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.