மஹிந்த யாப்பா அடுத்த சபாநாயகர், குழுக்கள் பிரதித் தலைவர் அங்கஜன்!

0

இலங்கையின் 09 வது நாடாளுமன்றத்தின் சபாநாயகர் பதவிக்கு தனது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற குழு கூட்டத்தின் போது தனது பெயர் முன்மொழியப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பிரதி சபாநாயகர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலப்பிட்டியவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், குழுக்கள் பிரதித் தலைவர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதனின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் மஹிந்த யாப்பா அபேகுணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் 09 வது நாடாளுமன்றத்தின் தொடக்க அமர்வு நாளை நடைபெறுகிறது. இதன்போது சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிராத்தித்து தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனபது குறிப்பிடத்தக்கது.