மாகாணங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்தை நேற்று (10) நள்ளிரவு முதல் இடைநிறுத்தியுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.
மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாட்டை விதிக்க அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்திற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் ஏ.எச். பண்டுக்க ஸ்வர்ணஹங்ச குறிப்பிட்டார்.