மாகாணங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது – அமுனுகம

0

நாட்டில் எதிர்வரும் வாரத்தில்கூட, மாகாணங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் பொது போக்குவரத்து சேவையை மீண்டும் தொடங்க COVID-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் (NOCPCO) பரிந்துரைக்கவில்லை என அவர் தெரிவித்தார்.

மாகாணங்களுக்கு இடையில் பொதுப் போக்குவரத்து சேவைகள் மீண்டும் தொடங்குவது தொடர்பாக அடுத்த வாரம் இராணுவத் தளபதியிடமிருந்து உறுதியான முடிவை எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.