மாகாணங்களுக்கு இடையேயான பயணக்கட்டுப்பாடுகள் அடுத்த 14 நாட்களுக்கு தொடர்ந்தும் அமுலில்

0

கோவிட் தொற்று அச்சம் காரணமாக நாட்டில் தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தொடர்பில் புதிய சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த சுற்றறிக்கையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன வெளியிட்டுள்ளார்.

அதன்படி, இன்று முதல் நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும், மாகாணங்களுக்கு இடையேயான பயணக்கட்டுப்பாடுகள் அடுத்த 14 நாட்களுக்கு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.