மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டாம் என மல்வத்துபீடம் வலியுறுத்து!

0

மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டாம் என மிக முக்கிய பௌத்த பீடங்களில் ஒன்றான மல்வத்துபீடம் வலியுறுத்தியுள்ளது.

மல்வத்து பீடத்தின் அனுநாயக்கர் திம்புல்கும்புரே விமலதர்ம தேரர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “மாகாணசபை என்பது வெள்ளையானை. அதனிடம் வேலை வாங்கமுடியாது.

மாறாக உணவுகளை மாத்திரமே வழங்கிக்கொண்டிருக்கவேண்டும். அவ்வாறானதொரு நிலைமை எமது நாட்டுக்கு தேவையில்லை.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இன்று மக்கள் வாழும் பகுதிகளுக்கு நேரில் சென்று பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கிவருகின்றார்.

எனவே, மாகாணசபைகள் வேண்டாம். அதற்கான தேர்தலை நடத்த வேண்டாம் என மகாநாயக்க தேரர்களின் சார்பில் கோரிக்கை விடுக்கின்றேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.