மாகாண சபைத் தேர்தல் எப்போது? – வெளியானது முக்கிய தகவல்

0

2021ஆம் ஆண்டு தமிழ், சிங்கள சித்திரை புத்தாண்டின் பின்னர், மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி மாதம் மாகாண சபைத் தேர்லை நடத்துவதற்கான ஏற்பாடுகள் இதற்கு முன்னர் முன்னெடுக்கப்பட்ட போதிலும், கொவிட் தொற்றினால் திட்டமிட்ட வகையில் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாதுள்ளதாக அறிய முடிகின்றது.

கொவிட் தொற்று குறிப்பிடத்தக்களவு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதன் பின்னர், மாகாண சபைத் தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

நல்லாட்சி அரசாங்கத்தின் காலப் பகுதியில் நடத்த வேண்டிய மாகாண சபைத் தேர்தல், எல்லை நிர்ணய பிரச்சினை காரணமாக நடத்தப்படவில்லை.

சில மாகாண சபைகளில் காலம் நிறைவடைந்து, இரண்டரை வருடங்களும் கடந்து விட்டன.

இந்தநிலையில், மாகாண சபைத் தேர்தலை புதிய முறையிலா அல்லது பழைய முறையிலா நடத்துவது என்பது குறித்து இதுவரை இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை.

பழைய முறையில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுமாக இருந்தால், அமைச்சரவை பத்திரமொன்றை அமைச்சரவையில் சமர்பித்து, அதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்க வேண்டும்.

அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்படும் அமைச்சரவை பத்திரம், சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் ஊடாக பாராளுமன்றத்திற்கு சமர்பித்து, பாராளுமன்றத்தில் நிறைவேற்றியதன் பின்னர், மாகாண சபைத் தேர்தலை பழைய முறையின் கீழ் நடத்த முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.