மாகாண சபை தேர்தலை ஒத்திவைக்க தீர்மானம்

0

மாகாண சபை தேர்தலை ஒத்திவைக்க அரச கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானித்துள்ளனர்.

மாகாண சபை தேர்தல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து ஜனாதிபதி தலைமையில் அரச கட்சித் தலைவர்கள் கூட்டம் நேற்று (திங்கட்கிழமை) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போதே, நாட்டில் தற்போது நிலவும் கொரோனா வைரஸ் தொற்று நிலைமையைக் கருத்திற்கொண்டு மாகாண சபை தேர்தலை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் நாட்டுக்கு ஒரு மாகாண சபை அமைப்பு தேவை என்று அரச கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.