சிறுவனொருவரை கொடூரமாக தாக்கியதற்காக பாடசாலை அதிபர் ஒருவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை இன்று தெரிவித்துள்ளது.
2013 ஆம் ஆண்டில் 12 வயது சிறுவனை கொடூரமாக தாக்கியது தொடர்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை புகார் வந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டு கொழும்பைச் சேர்ந்த 52 வயது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் மீது நீதிமன்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கு விசாரணையின்போது, தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
கொழும்பு உயர் நீதிமன்றம் பாடசாலை அதிருக்கு இப்பொழுது இரண்டு ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனை விதித்துள்ளது.
மாணவனுக்கு இழப்பீடாக ரூ.25,000 ரூபாய் வழங்குமாறும் உத்தரவிடப்பட்டது..