களுவாஞ்சிகுடியில் இயங்கிவரும் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பானது அதன் தவிசாளர் இரா.சாணக்கியனின் வழிகாட்டலிலும், தலைமையின் கீழும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மூலைமுடுக்குகளிளெல்லாம் அமைப்பின் சேவைகளை கொண்டுசென்று அதனூடாக கல்வி, விளையாட்டு, வாழ்வாதாரம் போன்ற சமூக சேவைகளை செய்துகொண்டிருக்கின்றார்.
அந்த வகையில் கடந்த 05 வருடங்களாக தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களை தயார்ப்படுத்தி சித்தி வீதத்தை அதிகரிக்கும் நோக்கில் மட்டக்களப்பில் உள்ள பட்டிருப்பு, மட்டக்களப்பு, மட்டக்களப்பு மேற்கு, கல்குடா போன்ற கல்வி வலயங்களுக்கு மாதிரி வினாத்தாள்கள் மற்றும் செயலட்டைகளை சுமார் 7000 மாணவர்களுக்கு வருடந்தோறும் வழங்கி அதனூடாக சிறந்த அடைவுமட்டத்தை பெறுவதற்கு வழிவகுத்திருக்கிறார்.
வினாத்தாள்களை மாணவர்களிடம் கையளிக்கும் போது இந்த சேவையானது எதிர்வரும் காலங்களிலும் மேலும் சிறப்பான முறையில் நடைபெறும் எனவும், வினாத்தாள்களையும், செயலட்டைகளையும் மாணவர்கள் சுயகற்றலினூடாக சிறந்த அடைவுமட்டத்தை அடைய வேண்டும்.
அதற்காக ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் அயராத முயற்சியும் மாணவர்களின் திடமான நம்பிக்கையும் வலுச்சேர்க்க வேண்டும் எனவும் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.