மாதவிடாய் காலப் பகுதியில் பயன்படுத்தும் நப்கீனை, பாடசாலை மாணவிகளுக்கு இலவசமாக வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
6ம் தரத்திற்கு மேல் கல்வி பயிலும் மாணவிகளுக்கு இவ்வாறு நப்கீனை இலவசமாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுமார் 1.2 மில்லியன் மாணவிகள், மாதவிடாய் காலப் பகுதியில் பாடசாலைக்கு சமூகமளிப்பதில்லை என ஆய்வொன்றின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறு பாடசாலைகளுக்கு குறித்த காலப் பகுதியில் சமூகமளிக்காமையினால், அவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறைந்த வருமானத்தை கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 65 வீதமான மாணவிகள் கல்வி பயின்று வருவதாகவும், அவர்களுக்கு நப்கீன்களை கொள்வனவு செய்வதில் சிரம நிலைமை காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
இந்த நிலையிலேயே, குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.