மாத்தறையில் தங்கியிருந்த காணப்பட்ட ரஷ்ய பிரஜைக்கு கொரோனா தொற்று இல்லை!

0

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதாக அடையாளம் காணப்பட்ட ரஷ்ய பிரஜைக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையின் பணிப்பாளர் சுரங்க உபேசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு அமைய அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்ய விமான பணியாளர்கள் 15 பேர் கடந்த 13 ஆம் திகதி மாத்தறை – பொல்ஹேன பகுதியில் அமைந்துள்ள  ஹோட்டலுக்குச் சென்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து குறித்த 15 பேரும் மறுநாள் நாட்டைவிட்டு செல்வதற்கு தீர்மனித்திருந்த நிலையில், அவர்களுக்கு பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த பரிசோதனையில், ரஷ்ய பிரஜை ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த விமான பணியாளர்கள் தங்கியிருந்த ஹோட்டலின் ஊழியர்கள் அனைவரும் ஹோட்டலிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.