மானிப்பாயில் வீட்டில் கொள்ளை!

0

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மானிப்பாய் கிழக்கு பகுதியில் 70 வயதுடைய தனிமையில் வசித்து வந்த மூதாட்டியின் வீட்டினுள் கொள்ளை இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம், இன்று (சனிக்கிழமை) அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனிமையில் இருந்த மூதாட்டியின் காதில் இருந்த தோடு மற்றும் கையில் காணப்பட்ட வளையல்கள் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளது.

இந்த நகைகள், 6 பவுண் என மூதாட்டி தெரிவித்துள்ள நிலையில் மேலதிக விசாரணையை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.