முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, மாவனெல்லையில் புத்தர் சிலைகளை இடித்த சந்தேகநபர்களுடன் நெருங்கிய தொடர்பினை பேணியுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவு, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மேலும் அவர், இலங்கை குடியரசின் இறையாண்மைக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் முஸ்லிம் தீவிரவாதிகளுக்கு உதவியுள்ளமையும் தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவு நீதிமன்றத்தில் அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளது.
முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, பயங்கரவாத தடை சட்டம் மற்றும் குற்றவியல் சட்டங்களின் கீழ் குற்றப்புலனாய்வு பிரிவினரால் அண்மையில் கைது செய்யப்பட்டார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாகவே அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக குற்றப் புலனாய்வு பிரிவு அறிவித்திருந்தது.
இந்நிலையில், தற்போது, மாவனெல்லெயில் புத்தர் சிலைகளை இடித்த சந்தேகநபர்களுடன் நெருங்கிய தொடர்பினை பேணியுள்ளதாக கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு குற்றப் புலனாய்வு பிரிவு, அறிக்கையொன்றின் ஊடாக தெரிவித்துள்ளது.