“மிகவும் அச்சமடையக்கூடிய அளவிற்கு கொரோனா தொற்று கொடிய நோய் அல்ல”

0

கொரோனா தொற்று மிகவும் அச்சமடையக்கூடிய அளவிலான கொடிய நோய் அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், 100 க்கு 81 விகிதமானவர்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டதை அறியாமல் வைரஸிலிருந்து மீண்டு வருவதாக கூறினார்.

மக்களிடையே காணப்படும் தேவையற்ற அச்சமே இறப்புகளுக்கு முக்கிய காரணம் என்றும் அவர் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் இலங்கையில் இறப்பு விகிதம் இன்னும் 1.9 சதவீதமாக உள்ளது என்றும் எஸ்.பி. திசாநாயக்க குறிப்பிட்டார்.