மினுவாங்கொடை கொரோனா நோயாளர் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கலாம் !

0

மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய மற்றும் அவர்களுடன் பழக்கத்தில் இருந்த சுமார் 321 பேர் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இதன் மொத்த எண்ணிக்கை 400 ஐ தாண்டலாம் என தகவல் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் முதலாவதாக கொவிட் தொற்றுக்குள்ளான பெண்ணுக்கு சிகிச்சை வழங்கிய தாதி யாழ்ப்பாணத்திற்கு ரயிலில் சுற்றுலா சென்றுள்ளார்.

அந்த ரயிலில் பயணித்த கடற்படை சிப்பாய்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.