மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

0

மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் கொரோனா தொற்று சந்தேகத்தில் பி சி ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 69 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த ஒரு வார காலப்பகுதிக்குள் மினுவாங்கொடை ,திவுலப்பிட்டிய ,வெயாங்கொட பகுதிகளுக்கு சென்றுவந்தோர் மருத்துவரை நாடி பரிசோதனை செய்துகொள்ளுமாறும் இராணுவத்தளபதி கேட்டுள்ளார்.