மின்சாரக் கட்டணத்தை செலுத்துவதற்காக வழங்கப்பட்ட சலுகைக்காலம் நீடிப்பு

0

மின்சாரக் கட்டணத்தை செலுத்துவதற்காக வழங்கப்பட்ட சலுகைக்காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதற்கமைய குறித்த சலுகைக்காலம் எதிர்வரும் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், நாட்டின் தற்போதைய நிலையினைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று நாட்டில் முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதன் பின்னர் தவணைமுறையில் மின்சார கட்டணத்தை வழங்குவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மின்சாரக் கட்டணங்கள் மிகுதியின்றி முற்றாக செலுத்தப்படும் வரை தொடர்ந்தும் மின்சாரம் வழங்கப்படும் எனவும் மின்சக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.