மின்சார கட்டணத்தை செலுத்தாதவர்களுக்கு விசேட சலுகை

0

மின்சார கட்டணங்களை செலுத்த பாவனையாளர்களுக்கு எதிர்வரும் 31 ஆம் திகதிவரை விசேட சலுகை வழங்கப்படுவதாகவும் இந்த காலகட்டத்தில் மின்சாரம் துண்டிக்கப்படாது என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தபட்டுள்ளதால் மக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியத்தை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் குறிப்பாக கொழும்பு, ஹம்பகா மற்றும் புத்தளம் மாவட்டங்களில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தளர்த்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.