மின்சார கட்டணம் அதிகரிக்கப்படுமா?

0

மின்சார கட்டணத்தை அதிகரிக்கும் திட்டங்கள் எதுவும் கிடையாது என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் புதிய தவிசாளர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஆணைக்குழுவின் புதிய தவிசாளராக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டதை அடுத்து, ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய மின்சார கட்டணங்கள் கூட ஒப்பீட்டளவில் அதிகம் எனவும் இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தவிசாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்காலத்தில் மின்சார செலவைக் குறைக்க மின்சார உற்பத்தியில் மேலும் புதுப்பிக்கத்தக்க மின்சார ஆற்றலை சேர்க்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகளை அடைய தேவையான உதவி வழங்கப்படும் என கூறிய அவர், புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்களின் மூலம் மின்சாரத் தேவையில் 70 சதவீதத்தைப் பெறுவதே அரசாங்கத்தின் இலக்கு எனவும் சுட்டிக்காட்டினார்.