மின்சார வேலியொன்றில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு

0

திருகோணமலை – மொரவெவ 10 ஆம் கட்டை பகுதியில் மின்சாரம் தாக்கி சிறுவனொருவர் உயிரிழந்துள்ளார்.

காட்டு யானைகளுக்கான சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்சார வேலியொன்றிலேயே சிறுவன் மோதுண்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் 8 வயதான சிறுவன் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சடலம் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சட்டவிரோதமாக மின்வேலியை அமைத்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.