மின்வெட்டு ஏற்படும் நேரத்தை தெளிவாக அறிவிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

0

மின்வெட்டு ஏற்பட்டால் மின்வெட்டு ஏற்படும் நேரத்தை தெளிவாக அறிவிக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

ஆளுங்கட்சி உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.

இது குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் முடிவு செய்து தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

எனினும் மின்சாரம் துண்டிக்கப்படாமல் மக்களைப் பாதுகாப்பதே அரசாங்கத்தின் முயற்சி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.