மின் கட்டணத்தை செலுத்துவதில் விகிதாசார சலுகை வழங்க யோசனை

0

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு மின் கட்டணத்தை செலுத்துவதற்காக விகிதாசார அடிப்படையில் சலுகை வழங்குவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையின் அடிப்படையில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஏனைய தரப்பினர் தொடர்பிலும் பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டதாக மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையை ஆராய்ந்ததன் பின்னர், அமைச்சரவை அனுமதிக்காக நாளை (08) சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.