மியன்மாரில் இருந்து ஒரு லட்சம் மெற்றிக் டன் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானம்

0

உடன் அமுலாகும் வகையில் ஒரு லட்சம் மெற்றிக் டன் அரிசியை மியன்மாரில் இருந்து இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வர்த்தக அமைச்சு மற்றும் மியன்மார் அதிகாரிகள் கைச்சாத்திட்டுள்ளனர்.

களஞ்சியப்பத்தி வைப்பதற்காக இந்த அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, எரிவாயு மற்றும் பால்மா உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்காக மக்கள் இன்றைய தினமும் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

இவ்வாறான பின்னணியில் கோதுமை மா தட்டுப்பாடு காரணமாக நாட்டில் பாணுக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை எதிர்காலத்தில் ஏற்படும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

தற்போது வெதுப்பக உரிமையாளர்களுக்கு 50 சதவீத கோதுமை மா மாத்திரமே கிடைக்கின்றது.

எதிர்காலத்தில் பாணுக்கான பாரியளவு தட்டுப்பாடு ஏற்படக்கூடும்.

தேவையான அளவு கோதுமை மா வழங்குவதற்கு அது சார்ந்த நிறுவனங்கள் தயாராக இருக்கின்ற போதிலும் அவர்களுக்கு தேவையான டொலர் இல்லை எனவும் அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.