மீண்டும் ஒக்டோபர் 9 முதல் நவம்பர் 16 வரை பாடசாலை விடுமுறை

0

பாடசாலைகள் இரண்டாம் தவணை விடுமுறைக்காக ஒக்டோபர் 9 முதல் நவம்பர் 16 வரை மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

ஓகஸ்ட் மாதம் நடைபெறவிருந்த பரீட்சைகள் ஒக்டோபர் மாதம் நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதால் ஒக்டோபர் 9 முதல் பாடசாலைகளை மூடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இன்று கல்வி அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இவ்விடயங்கள் தெரிவிக்கப்பட்டன.

அத்தோடு, தரம் 11, 12, 13 ஆகியவற்றுக்கான கற்பித்தல் செயற்பாடுகள் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாவதோடு, ஏனைய தரங்களுக்கு ஓகஸ்ட் 10 ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது,