மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம்

0

வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் டெங்கு காய்ச்சலால் 18,977 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நோயாளர்களில் பெரும்பாலானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

மழையுடனான வானிலை ஆரம்பமாகியுள்ள நிலையில், எதிர்வரும் காலங்களில் டெங்கு நுளம்புகள் பெருகும் அபாயமுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் நீர் தேங்கும் பகுதிகளை அடையாளங்கண்டு, டெங்கு நுளம்புகள் பெருகாத வகையில் மக்கள் செயற்பட வேண்டும் எனவும் விசேட வைத்திய நிபுணர் அருண ஜயசேகர வலியுறுத்தியுள்ளார்.