மீண்டும் திறக்கப்படுகின்றது பேலியகொட மீன் சந்தை!

0

பேலியகொட மீன் சந்தை மொத்த விற்பனை நடவடிக்கைகளுக்காக  நாளை(சனிக்கிழமை) முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளது.

பேலியகொட மீன் விற்பனையாளர்கள் சங்கம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது.

மீன் வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் பிலியந்தல பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கடந்த 22ஆம் திகதி கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டது.

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட குறித்த மீன் வியாபாரி, கடந்த 18 ஆம் திகதி பேலியகொட மீன் சந்தைக்கு வருகை தந்திருந்தமை தெரியவந்ததனையடுத்து பேலியகொட மத்திய  மீன்சந்தை மூடப்பட்டது.

இதேவேளை, பேலியகொட  மத்திய மீன்சந்தை  வர்த்தகள் 529 பேர் நேற்று  PCR பரிசோதனை  நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதன்போது பேலியகொட மத்திய மீன்சந்தை   வர்த்தகர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.