மீண்டும் பாடசாலைகள் மூடப்படுமா? கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்

0

இலங்கையில் நிலவும் கோவிட் நிலையை அடுத்து பாடசாலைகளை மீண்டும் மூடிவைப்பதற்கு தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலையில் கோவிட் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டால் இதற்கு முன்னர் இருந்த முறையில் அவசியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி பாடசாலை கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார பிரிவுகள் அறிவித்துள்ளது.

அதற்கமையவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதுவரையில் பாடசாலை கட்டமைப்பினை முழுமையாக மூடுவதற்கான தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை.

தற்போதுவரையிலும் கோவிட் தொற்றுக்குள்ளான நிலையில் பாடசாலை மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். எனினும் பாடசாலை ரீதியாகவே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.