மீண்டும் புதிய வைரஸாக உருவாகலாம்! நெருக்கடியில் இலங்கை

0

இலங்கையில் பரவும் புதிய வைரஸ் பிரித்தானிய வைரஸாக இருந்தாலும் கூட தற்போது மக்களின் ஒன்றுகூடலின் மூலமாக வைரஸ் மாறுபடும் தன்மை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு அல்லது மூன்று வைரஸ் தொற்றுக்கள் ஒன்றிணைந்து மாறுபட்ட புதிய வைரஸாக உருவாகலாமென வைரஸ் தொற்றுக்கள் குறித்த விசேட வைத்தியர் ரேஹித மதுகம எச்சரித்துள்ளார்.

வைரஸின் வீரியம் அதிகரிக்கும் பட்சத்தில் மீண்டும் கொத்தணிகள் உருவாகலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், வீரியம் கூடிய வைரஸ் ஒன்றினை இலகுவாக கட்டுப்படுத்த முடியாது, இலங்கையும் தற்போது அவ்வாறான நெருக்கடியில் உள்ளதென கருதுகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.