எதிர்வரும் 3 வாரங்கள் அவதானமிக்கதென இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கடந்த நாட்களாக மக்கள் செயற்பட்ட முறை காரணமாக மீண்டும் கோவிட் வைரஸ் பரவுவதற்கான ஆபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் வார இறுதி சுற்றுலா பயணங்களை தவிர்க்குமாறு அவர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்வதனை தவிர்க்குமாறு இராணுவ தளபதி பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளளார். வீட்டை விட்டு வெளியே செல்லும் போது முகக் கவசம் அணிவது கட்டாயமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இதுவரையில் அடையாளம் காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 98050 வரை அதிகரித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இரண்டு மாதங்களின் பின்னர் நேற்றைய தினம் அதிகமான கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய 516 தொற்றாளர்கள் நேற்றைய தினம் அடையாளம் கணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.