மீனவர்கள் கடலுக்குச் செல்ல அனுமதி

0

காலி துறைமுகத்தின் ஊடாக, மீனவர்களுக்கு கடலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி, மீனவர்கள் இன்று முதல் தொழிலுக்குச் செல்லலாமென, காலி மீன்பிடி துறைமுகமுகாமையாளர் நிரஞ்சன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொரோனா தொற்று காரணமாக, இந்த மாதம் 21ஆம் திகதியிலிருந்து காலி மீன்பிடி துறைமுகம் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.