மீனை பச்சையாக உண்ட முன்னாள் அமைச்சர் – மீன்கள் மூலம் கொரோனா பரவாது என்பதை நிருபிக்கவே இப்படி செய்தாராம்!

0

மீன்களின் ஊடாக கொரோனா தொற்று பரவாது என்பதை உறுதிப்படுத்துவதற்காக முன்னாள் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் திலீப் வெதஆராய்ச்சி வித்தியாசமான நடவடிக்கையொன்றை முன்னெடுத்தார்.

கொழும்பில் இன்று செவ்வாய்கிழமை நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் திலீப் வெதஆராய்ச்சி கலந்துக்கொண்டிருந்தார்.

இதன்போது, மீன்னொன்றை ஊடக சந்திப்பிற்கு எடுத்து வந்த அவர், ஊடக சந்திப்பில் மீன்னை பச்சையாக உட்கொண்டு, மீன்களின் ஊடாக கொரோனா பரவாது என்பதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்தார்.