முகக்கவசங்களில் கட்சியின் சின்னங்களை அச்சிடுவதற்கு தடை

0

பிரசார நடவடிக்கைகளுக்காக முகக்கவசங்களில் வேட்பாளர்களின் இலக்கங்கள்,பெயர்கள் மற்றும் படங்கள் போன்றவற்றை வெளியிட முடியாது என பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

இன்று (வியாழக்கிழமை) பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளையடுத்தே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இது தொடர்பான அறிவித்தல் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.