முகக்கவசம் அணியாதவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

முகக்கவசம் அணியாதவர்கள் பேருந்துகளில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கூறியுள்ளார்.

நாட்டில் தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், மக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதேநேரம், சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைய போக்குவரத்தை முன்னெடுக்குமாறு அனைத்து அதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

மேலும் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு அமைய மாத்திரம் பேருந்து போக்குவரத்தை முன்னெடுப்பதற்கு இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது.

கொரோன தொற்று தொடர்பாக வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக போக்குவரத்து சபையின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.