முகக்கவசம் அணியாத மேலும் 162 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்

0

மேல் மாகாணத்தில் முகக்கவசம் அணியாத மேலும் 162 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகம் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 5 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையினைத் தொடர்ந்தே இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், முகக்கவசத்தை சரியான முறையில் அணியாத 905 பேர் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.