முகக் கவசங்களுக்கான வரி நீக்கம்

0

இறக்குமதி செய்யப்படும் முகக் கவசங்களுக்கு தீர்வை வரி அடங்கலான ஏனைய வரி விதிப்புகள் நீக்கப்பட்டுள்ளன.

நிதி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று(புதன்கிழமை) நள்ளிரவு முதல் இந்த வரி நீக்கம் அமுலுக்கு வரவுள்ளதாகவும் நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள சுகாதார பாதுகாப்பு வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் வலுவாக முன்னெடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதற்கிணங்க முகக் கவசங்கள் மற்றும் தொற்று நீக்கிகள் உள்ளிட்ட இறக்குமதி பொருட்கள் வர்த்தக பொருட்களுக்கான விசேட வரி சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

இதேவேளை, நாட்டில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.