முச்சக்கரவண்டி ஒன்றில் இருவர் மாத்திரமே பயணிக்க முடியும் என அறிவிப்பு

0

முச்சக்கர வண்டிகளில் இரண்டு பயணிகளை மாத்திரமே ஏற்றிச் செல்ல முடியும் என சுகாதார சேவை பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள சிகை அலங்கார நிலையங்களை தற்காலிகமாக மூடுமாறும் அவர் அறிவித்துள்ளார்.

கொழும்பு – பண்டாரநாயக்க பகுதியில் உள்ளவர்களுக்கு சிகை அலங்காரம் செய்யும் ஒருவர் ஊடாக கொரோனா தொற்று பரவியிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதையடுத்து, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டில் வைத்தியசாலைகளை அண்மித்துள்ள சிறிய உணவகங்களையும் தற்காலிகமாக மூடுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.