முஜிபுர் ரஹ்மான் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிப்பு

0

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளாரென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

அத்தோடு, அவரது குடும்பத்தினரும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரனுக்கும் நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.