முட்டைகளின் விலை அதிகரிப்புக்கு இதுதான் காரணம்!

0

கொரோனாவினால் நாடு முடக்கப்பட்ட காலத்தில் மிகக் குறைந்த 10 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட முட்டைகளின் விலை, கடந்த சில நாட்களில் சடுதியாக உயர்ந்துள்ளது.

சோளம் உட்பட்ட கோழி தீவனங்களின் அதிக விலையே இதற்கான காரணம் என்று அனைத்து இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் அத்தநாயக்கவின் தெரிவித்துள்ளார்.

55 ரூபாவுக்கு விற்கப்பட்ட ஒரு கிலோ மக்காச்சோளம் இப்போது ரூ .85 ஆக உயர்ந்துள்ளது. கோழி விவசாயிகள் மக்காச்சோளத்தை இத்தகைய அதிக விலைக்கு வாங்குவது சாத்தியமற்றது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சந்தையில் தற்போது முட்டைகளின் சில்லறை விலை .23 ரூபா 50 சதமாகவும் சில பகுதிகளில் .24 அல்லது 25 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

இலங்கையில் நாள் ஒன்றுக்கு முட்டைகளின் சராசரி நுகர்வு 8.5 மில்லியன் ஆகும். விலை உயர்வு காரணமாக முட்டைகளின் தினசரி நுகர்வு 30 சதவீதம் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.