முட்டை விலையும் அதிகரித்தது!

0

உள்நாட்டு சந்தையில் முட்டை விலையும் அதிகரித்துள்ளதாக இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

முட்டையொன்றின் விலை 14 ரூபா முதல் 17 ரூபா வரை இருந்த போதிலும், தற்போது 20 ரூபா முதல் 21 ரூபா வரை அதிகரித்துள்ளதாக அகில் இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க இன்று தெரிவித்தார்.