முதலாம் திகதிக்கு பின்னரான கட்டுப்பாடுகள் – இராணுவ தளபதியின் அறிவிப்பு

0

எதிர்வரும் அக்டோபர் முதலாம் திகதிக்குப் பின் நாட்டை மீண்டும் திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தற்போது வழிகாட்டல்கள் இறுதி செய்யப்பட்டு வருகின்றதாகவும் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை நீக்கிய பின் சுகாதாரம், பொது போக்குவரத்து, விவசாயம், பொது சேவை மற்றும் தனியார் துறையை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்த வழிகாட்டல்கள் மற்றும் கட்டுப்பாடுகளை அதிகாரிகள் அறிவிக்கவுள்ளதாகவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.