முனைப்பு நிறுவனத்தினால் விசேட தேவைக்குட்பட்ட மற்றும் நோயினால் பாதிக்கப்பட்ட இரண்டு குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வாழ்வாதார உதவியாக ஆடு வழங்கி வைக்கப்பட்டது. முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் தலைவர் மாணிக்கப்போடி சசிகுமார் மற்றும் செயலாளர் இ,குகநாதன் ,கிராம சேவை அதிகாரி இ.தட்சணாமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு குறித்த உதவியை வழங்கிவைத்தனர், குறித்த நிறுவனம் முனைப்பு சுவிஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வறிய குடும்பங்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் கல்வி அபிவிருத்திக்கும் அளப்பரிய பணியினை மேற்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது.