முன்னாள் காதலியை நடுவீதியில் கழுத்தறுத்து கொன்றுவிட்டு நஞ்சருந்திய காதல் வெறியன், வைத்தியசாலையில் கழுத்தறுத்தார்!

0

முன்னாள் காதலியை நடுவீதியில் கழுத்தறுத்து கொன்ற கொரூர காதலன் நஞ்சருந்திய நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவர் நேற்று தனது கழுத்தை வெட்டி தற்கொலைக்கு முயன்றார்.

கடந்த 21ஆம் திகதி மாதம்பை பொலிஸ் பிரிவில் இந்த கொலை நடந்தது.

தனது மாமாவுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற 22 வயது யுவதியே கொல்லப்பட்டார். ஹதரமண்ஹண்டிய பகுதியில் மின்மாற்றியொன்றின் பக்கத்தில் வாகனமொன்றுடன் மறைந்திருந்த இளைஞன், யுவதி பயணித்த மோட்டார் சைக்கிள் அருகில் வந்ததும், திடீரென சென்று வாகனத்தினால் மோதினார்.

அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்ததும், யுவதியை சிறுது தூரம் இழுத்துச் சென்று, கழுத்தை கூரான கத்தினால் அறுத்தார்.

பின்னர் நஞ்சு அருந்தி விட்டு அங்கிருந்து ஓடினார். சுமார் 150 மீற்றருக்கு அப்பாலிருந்த புதரில் விழுந்தார். யுவதியையும், இளைஞனையும் அங்கிருந்தவர்கள் சிலாபம் வைத்தியசாலையில் சேர்ப்பித்திருந்தனர். பின்னர் யுவதி உயிரிழந்தார்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொடூர காதலன், 24 காலை பிளேட்டால் தனது கழுத்தை அறுத்தார். சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் இரண்டு  பேரின் கண்காணிப்பில் அவர் சிகிச்சை பெற்ற போதும், அவர்களிற்கு டிமிக்கி விட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

காலை 7.15 அளவில் தன்னை கண்காணித்த சிறைச்சாலை அதிகாரிகள் இருவரிடமும், இயற்கை கடனுக்கு செல்வதாக கூறி, மலசலகூடத்திற்கு சென்றார். அங்கு பிளேட்டினால் தனது கழுத்தை அறுத்தார். எனினும், சிறை அதிகாரிகள் சுதாகரித்து அவது முயற்சியை முறியடித்தனர்.

கொல்லப்பட்ட யுவதியும், கொலைகாரனும் 3 மாதங்களாக காதலித்து வந்தனர். எனினும், ஒன்றரை மாதங்களின் முன்னர் யுவதி காதலிலிருந்து ஒதுக்கிக் கொண்டுள்ளார். இதற்கு பிழிவாங்கவே இந்த கொலை நடந்துள்ளது.