முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை இன்று சந்திக்கின்றார் பிரதமர்!

0

கடந்த நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும்,  இடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

இன்று(திங்கட்கிழமை) இந்த முக்கிய கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பில் பங்கேற்கப் போவதில்லை என  ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன அறிவித்துள்ளன.

எனினும் குறித்த கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இன்றைய தினம் இடம்பெறவுள்ள குறித்த கலந்துரையாடலில் நாட்டின் தற்போதைய நிலை குறித்து கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.