முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொதுநிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் 02 ஆம் திகக்கு முன்னர் உத்தியோகபூர்வ இல்லங்களை திருப்பிக் கையளிக்காத முன்னாள் அமைச்சர்கள் மீதே, இவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், அரசாங்கத்திற்கு சொந்தமான உத்தியோகபூர்வ இல்லங்களை இதுவரை கையளிக்காத முன்னாள் அமைச்சர்களின் பெயர்ப் பட்டியலையும் பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ளது.
குறித்த பெயர் பட்டியலில் ஜே.சி அலவத்துவல, ரவூப் ஹக்கீம், ரவிந்திர சமரவீர, அப்துல் ஹலீம், சந்திரானி பண்டார, லக்ஷ்மன் செனவிரத்ன, அமீர் அலி, எட்வட் குணசேகர, நலின் பண்டார, அசோக் அபேசிங்க, சம்பிக பிரேமதாஸ, வடிவேல் சுரேஷ், செல்வம் அடைக்கலநாதன், எச்.எம்.எம் ஹாரிஸ், பைசல் காசிம், துலிப் விஜேசேகர, துணேஷ் கங்கந்த,டி.பி ஏக்கநாயக்க, பைசஸர் முஸ்தபா, சந்திம வீரகொடி, ஹிஸ்புல்லா மற்றும் ஜகத் புஷ்பகுமார ஆகியோர் உள்ளடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்படி, தமது அமைச்சின் பொது சேவையை முழுமையாக ஆரம்பித்ததன் பின்னர் இது தொடர்பாக சட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.