முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது!

0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை – கிண்ணியா பகுதியிலுள்ள அவரது வீட்டில் வைத்து இன்று(செவ்வாய்கிழமை) காலை 6.30க்கு அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சதோச நிறுவனத்தின் வாகனம் ஒன்றினை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ள உள்ளதாகவும் இதனால் இவர் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

கைது செய்யப்படும் வேளையில் தனது வாகனத்தில் கொழும்பிற்கு வருவதாக அப்துல்லா மஹ்ரூப் குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு தெரியப்படுத்தியும் தங்களுடைய வாகனத்தில் அழைத்துச் செல்வதாக கூறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.