நாட்டின் அனைத்து முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி முன்பள்ளி மற்றும் ஆரம்பகல்வி அறநெறி பாடசாலை கல்விச்சேவைகள் மற்றும் பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
அடுத்த வாரம் முதல் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாக அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் ஆலோசனையின் பேரில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
இதனிடையே, ஆசிரியர்கள் உள்ளிட்ட பாடசாலை கல்விசாரா ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, நாட்டிலுள்ள 10,155 பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது.