நாட்டில் எந்தவொரு பகுதியிலும் கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டால் முன்னறிவிப்பின் அந்த பகுதி முடக்கப்படும் என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் பிரதேசம், பொலிஸ் பிரிவு, கிராம சேவகர் பிரிவு போன்றவைகள் உடனடியாக முடக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறான நிலைகளுக்கு முகம் கொடுப்பதற்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும் என இராணுவ தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த காலங்களில் முடக்கப்படுவது தொடர்பில் முன்கூடிய மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. எனினும் இம்முறை அவ்வாறு முன்னறிவிப்பு விடுக்காமல் முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார். எனினும் நாட்டை முழுமையாக முடக்குவதற்கு எதிர்பார்க்கவில்லை என இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடந்த சில தினங்களான நாளாந்தம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.