முன் அறிவிப்பு இன்றி மின் தடை!

0

ஹட்டன் பிரதேசத்தில் அடிக்கடி மின் விநியோகம் துண்டிக்கப்படுவதால் அப்பகுதியில் மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

இது தொடர்பில் அப்பகுதி மின் பாவனையாளர்கள் கருத்து வெளியிடுகையில், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக எவ்வித முன்னறிவிப்பும் இன்று திடீர் மின் தடை ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்.

சில நாட்களில் காலை 9 மணி தொடக்கம் மாலை 6 மணிவரையிலும், ஏனைய நாட்களில் சுமார் 4 முதல் 5 மணித்தியாலங்கள் வரையும் மின் தடை ஏற்படுவதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

எவ்வித முன்னறிவிப்புமின்றி மேற்கொள்ளப்படும் மின்வெட்டு காரணமாக பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

ஹட்டன் பிராந்திய மின்சார அலுவலகத்திலிருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, ​​ஹட்டன் பகுதியில் உள்ள மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகள் மாற்றப்படுவதாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.